யாழில் காணியை அளவீடு செய்ய வந்த உத்தியோகத்தர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்(Photos)
யாழ். சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சந்தியில் தனியாருக்கு சொந்தமான காணியை அளவீடு செய்ய வந்த நில அளவை திணைக்களத்திற்கு காணி உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இச்சம்பவமானது முத்துக்குமாரசாமி விநாசித்தம்பி என்பவரது எட்டுப்பரப்பு காணியில் இன்று (26) இடம்பெற்றுள்ளது.
இன்றையதினம் குறித்த காணியை நில அளவீட்டை மேற்கொள்வதற்காக நில அளவைத் திணைக்களம் வருகை தந்த நிலையில் காணி உரிமையாளர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதனை அடுத்து குறித்த காணியினை அளவீடு செய்ய முடியாத நில அளவை திணைக்களம் காணி உரிமையாளரிடமும் அங்கு எதிர்ப்பில் ஈடுபட்டவர்களிடமும் கடிதத்தினை வாங்கிய பின்னர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
குறித்த நபரின் காணியில் இலங்கை கடற்படையினர் கடற்படை முகாமை அமைத்து இருந்தது
குறிப்பிடத்தக்கது.






