தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள்
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் 11ஆம் நாள் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று(25) யாழ்ப்பாணம் - நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றுள்ளது.
நினைவேந்தல்
இதன்போது, தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் கலந்து கொண்டனர்.
யாழ். மாநகர சபை
தமிழ் மக்களின் விடுதலைக்காக 12 நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஆகுதியான தியாக தீபம் திலீபனுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். மாநகர சபையின் சபை அமர்வு மேயர் வி.மதிவதனி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்பொது ஆரம்பத்திலேயே தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநகர சபை மேயர் சுடரேற்றியதைத் தொடர்ந்து சபையில் பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதேநேரம் இந்த இந்த அஞ்சலி நிகழ்வில் ஈ.பி.டி.பியின் 4 உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாகாது அஞ்சலி நிகழ்வு நிறைவுற்ற பின்னர் சபை அமர்வில் பிரசன்னமாகாது அஞ்சலி நிகழ்வு நிறைவுற்ற பின்னர் சபை அமர்வில் பங்கு கொண்டனர்.
அராலி
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்றையதினம் அராலி செந்தமிழ் சனசமூக நிலையத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சி வட்டுக்கோட்டை கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரைகள் ஆற்றப்பட்டன.
இறுதியாக நினைவேந்தலில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன், உப தவிசாளர் க.இலங்கேஷ்வரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், வலி. மேற்கு பிரதே சபையின் உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு
தியாகதீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் வகையில் நடைபெற்றுவரும் நினைவு எழுச்சி வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
தியாக தீபம் திலீபனின் 38வது ஞாபகார்த்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு வாகரை புச்சாங்கேணி இன்றைய தினம் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 15ஆம் திகதி தொடக்கம் தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு எழுச்சி வாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலக்கியா தென்றல் அமைப்பின் அனுசரணையுடன் அதன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.நிதர்சன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சுற்றுப்போட்டியானது நாளை மாலை வரையில் நடைபெறவுள்ளதுடன் சுற்றுப்போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனிக் நினைவுத் திடலில் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இடம்பெற்றது.
ஐந்தம்ச கோரிக்கைய முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்து 38 ஆண்டுகள் கடந்த நிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூபி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அடையாள உண்ணாவிரதமும் மேற்கொள்ளப்பட்டது.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில், தாயக செயலணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனிக்கான அஞ்சலி நிகழ்வு நேற்றையதினம் (25) இடம்பெற்றிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தபிசாளர் வே. கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 38 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
தாயக செயலணியின் ஏற்பாட்டில் நேற்றையதினம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனியானது இன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் அஞ்சலியினை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டு, நாளை மன்னார் ஊடாக தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சென்றடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வலிகாமம் கிழக்கு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தியாக தீபம் திலிபனின் நினைவு தினத்தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டதுடன் திலிபனின் தியாகத்திற்கு மதிப்பளிக்குமுகமாக தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபை முன்றலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொதுமக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அஞ்சலி
அஞ்சலிச்சுடரினை இந் நாள் பிரதேச சபையின் உறுப்பினர் விஜயதாரணி ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடந்து தவிசாளரினால் அஞ்சலியுரை நிகழ்த்தப்பட்டது. உறுப்பினர்களும் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பிரதேச சபையின் அவை அமர்வில் தியாக தீபத்தினை நினைவு கூர்ந்து முன்னைய காலங்களில் திலிபன் வீதி என பிரயோகத்தில் காணப்பட்டு பின்னரான சூழ்நிலையில் பொக்கணை வீதி காணப்படும் வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவடுவதற்கும் அவ் வீதியின் பெயரை நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாக திலிபன் வீதி என மீளவும் மாற்றியமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலிபன் அவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமத்தினைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தியாக தீபம் திலிபன் அவர்களுக்கு திருவுருவச் சிலையினை 1975 ஆம் ஆண்டின் 4 இலக்க காட்சிப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ள10ராட்சி அமைச்சரின் அனுமதியைப் பெற்று நிறுவுவதெனவும் தவிசாளர் தியாகராஜா நிரோஷனால் அவைத் தீர்மானத்திற்காக முக்வைக்கப்பட்டது.
இத் தீர்மானங்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












