வாகன விபத்தில் சிக்கி பொலிஸ் கான்ஸ்டபிள் பரிதாப மரணம்!
கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, எதிர்த் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்குட்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதியில் நம்புலுவ சந்திக்கு அருகில் நேற்றுமுன்தினம்(24) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான பொலிஸ் கான்ஸ்டபிள் பலத்த காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
வரக்காபொல, மஹேனகமவைச் சேர்ந்த 33 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே உயிரிழந்துள்ளார்.
சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
லொறியின் சாரதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்து நிட்டம்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



