யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி!
யாழ்ப்பாணம்-சாவகச்சேரி, நுணாவில் ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று(25) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனத்தை, அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
விசாரணை
இதனால் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மீசாலை வடக்கு, புத்தூர் சந்தி பகுதியைச் சேர்ந்த தி.யதுஸ் (வயது 20) என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்தார்.
விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



