பதவி விலகுதல் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதியின் அதிரடி முடிவு
ரஷ்யாவுடன் நடக்கும் போர் முடிந்தவுடன் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தான் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜெலென்ஸ்கியின் நோக்கம்
போர் முடிந்தால், தேர்தலுக்கு செல்லமாட்டேன். ஏனெனில் என் நோக்கம் தேர்தல் அல்ல, போரை முடிப்பதே" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019இல் நடந்த தேர்தலில் ஜெலென்ஸ்கி உக்ரைனின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, 2024-ல் தேர்தல் நடைபெறவேண்டிய நிலையில் 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீதி படையெடுத்ததையடுத்து, நடைமுறைப்படுத்தப்பட்ட இராணுவ சட்டம் (Martial Law) காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
ஜெலென்ஸ்கி உறுதி
இதனால், அவரது அரசியல் சட்டபூர்வத்தன்மை குறித்து ரஷ்யா தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகிறது. "போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால், பாதுகாப்பு சூழ்நிலை தேர்தலுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.
போர் நடக்கும்போது தேர்தல் நடத்த முடியாது. மக்கள் சட்டபூர்வமான, திறந்த மற்றும் ஜனநாயக தேர்தலை பெறவேண்டும்" என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் ஒகஸ்டில் நடந்த Oval Office சந்திப்பிலும், "அமைதி ஏற்பட்டதும் தேர்தல் நடத்தப்படும்" என ஜெலென்ஸ்கி உறுதியளித்தார்.
செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 59 சதவீத உக்ரேனியர்கள் ஜெலென்ஸ்கியை நம்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



