ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள்! - பிரதமரும், ஜனாதிபதியும் தீர்வு வழங்குவார்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் மற்றும் குழப்ப நிலைமைகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தீர்வு வழங்குவார்கள் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் சில கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் விரைவில் தீர்வு வழங்குவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பல கட்சிகளைக் கொண்ட கூட்டணி எனவும் இதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றை ஒன்று விமர்சனம் செய்வதனை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சிகள் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடாத்த முடியும் என்ற போதிலும் ஆளும் கட்சியின் சில கூட்டணி கட்சிகளுக்கு தனித்து பயணிக்க முடியாது என்பதனை அவர்கள் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri