சடுதியாக உயர்ந்தது வாகனங்களின் விலை! - மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளங்களில் வெளியாகும் விளம்பரங்களின்படி, இரண்டு ஆண்டுகளில் வாகனங்களில் விலை 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த விலைகள் உயர்ந்துள்ளன. ஆனால், விலை உயர்ந்தாலும் விற்பனை குறைந்துள்ளதாக வாகன உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அந்நிய செலாவணி நாட்டிற்குள் வர ஆரம்பித்ததை அடுத்தே, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வாகனங்கள் மற்றும் டயில் தவிர்ந்த ஏனைய அனைத்து அத்தியாவசியமற்ற பொருட்களும் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதனூடாக பாரியளவிலான அந்நிய செலாவணி நாட்டை விட்டு வெளியில் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
