பொதுமக்களுக்கு மேலும் அதிகரிக்கும் சுமை! மண்ணெண்ணெய்யின் விலை அதிகரிக்கப்படலாம்
அரசாங்கம் பயன்படுத்தும் விலைச்சூத்திரத்தின்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றுக்கு 275 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்வதால் அரசாங்கத்துக்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் ரூ.400ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாவாக தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாகவும், மண்ணெண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri