புனித வெள்ளரசு மரத்தை வழிப்பட்ட ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.
இதனை முன்னிட்டு ஜனாதிபதி அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதி புனித வெள்ளரசு மரம் அமைந்துள்ள இடத்தில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, புனித போதி மரத்திற்கு பால் உணவை படைத்து வழிப்பட்டுள்ளார்.
அத்துடன் புனித வெள்ளரசு மரத்தினை வழிபடுவதற்காக அங்கு வந்திருந்த மக்களுடனும், ஜனாதிபதி கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜனாதிபதி அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஸ்ரீனிவாச தேரரை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதியுடன் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



