இலங்கை வரலாற்றில் நால்வருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்ற கையெழுத்திட்ட ஒரேயொரு ஜனாதிபதி
இலங்கையில் ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்ட ஒரே ஜனாதிபதி தான்தான் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இதுவரை போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்ட ஒரே ஒரு ஜனாதிபதி நான்தான். இதுதான் எனது நிலைப்பாடு.
புதியச் சட்டங்கள்
நாங்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களிலேயே, இந்த நாட்டின் மக்களுக்கு நினைவிருக்கும் வகையில் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
அதன்போது, முதலில் நான் செய்தது என்னவென்றால், போதைப்பொருள் மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பான சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்தியதுதான்.

இதன் காரணமாக, என்னால் முடிந்தளவு போதைப்பொருள் பாவனையையும் அதன் பரவலையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தேன்.
அதேபோன்ற சிறையில் இருந்து கொண்டே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வருக்கு எதிரான மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திட்டிருந்தேன்.
எனவே என்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri