ஜப்பானிய பிரதமரை சந்தித்த ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கும் (Fumio Kishida)இடையிலான சந்திப்பு இன்று (28) பிற்பகல் நடைபெற்றுள்ளது.
டோக்கியோவிலுள்ள அகசகா மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளை மேலம் வலுப்படுத்தல் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
ஜப்பானிய பேரரசருடன் சந்திப்பு

இதேவேளை ஜப்பானிய பேரரசர் நருஹிதோவிற்கும் ஜனாதிபதி ரணிலுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
டோக்கியோவிலுள்ள பேரரசரின் உத்தியோகபுர்வ இல்லமான இம்பீரியஸ் அரண்மனையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri