ஜனாதிபதி மக்களை பயமுறுத்தி வருகிறார்-நாலக கொடஹேவா
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மைய காலத்தில் இருந்து நாட்டு மக்களை பயமுறுத்தி வருவதாக ஆளும் கட்சியில் இருந்து விலகி எதிரணியுடன் இணைந்துள்ள டளஸ் அழகப்பெரும அணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
பேய்களுக்கு பயந்தால் மயானங்களில் வீடுகளை கட்ட முடியாது

பேய்களுக்கு பயந்தால் மயானங்களில் வீடுகளை கட்ட முடியாது என்பதை ஜனாதிபதிக்கு கூற விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி அண்மைய காலமாக மக்களை பயமுறுத்தி முயற்சித்து வருகிறார்.பல்வேறு அச்சுறுத்தல்களை விடுக்கின்றார். பேய்களுக்கு பயந்தால், மயானங்களில் வீடுகளை கட்ட முடியாது என்பதை ஜனாதிபதிக்கு கூற விரும்புகிறேன்.
அன்று மிகப் பெரிய பலம் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மத்திய வங்கி பிணைமுறி கொள்ளை மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்பனை செய்யப்பட்டமைக்கு எதிராக நாங்கள் பேசினோம்.
பயமுறுத்தி வாய்களை அடைக்க முடியாது

அதேபோல் தற்போது எவ்வித அச்சமும் இன்றி மக்களுக்காக குரல் கொடுப்போம். இன்னும் மூன்று வருடங்கள் பதவிகளையும் சிறப்புரிமைகளையும் வைத்திருக்கக்கூடிய நிலையிலேயே அனைத்தையும் கைவிட்டு, மக்கள் பக்கம் நின்றுக்கொண்டோம்.
இதனால், பயமுறுத்தி எமது வாய்களை அடைத்து விடலாம் என்று எண்ண வேண்டாம் எனவும் நாலக கொடஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam