பொருளாதார நெருக்கடிக்கு அடித்தளமிட்டவர் மகிந்த: நாலக கொடஹேவா
மகிந்த ராஜபக்ச நிதியமைச்சராக பதவி வகித்த காலத்திலேயே நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அடித்தளமிடப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த காலத்தில் தன்னிச்சையாக செயற்பட்ட விதமும் இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கலாநிதி பீ.பி. ஜெயசுந்தர வரியை இரத்துச் செய்யும் யோசனை எம்மை நெருக்கடிக்கு உள்ளாக்கும் என நான் ஜனாதிபதியிடம் கூறினேன். அதனை நான் அறிந்தும் இருந்தேன். இதனை நான் பல முறை பகிரங்கமாக கூறினேன்.
அத்துடன் ஒரு ஆண்டுக்குள் இரசாயன பசளை பாவனையில் இருந்து சேதனப் பசளை பயன்பாட்டுக்கு செல்லலாம் என்று வியத்கம கூறவில்லை.
10 ஆண்டுகளுக்குள் சேதனப பசளை பயன்பாட்டுக்கு செல்லலாம் என்பதை சௌபாக்கிய நோக்கு கொள்கை அறிக்கையில் நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம்.
மேலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு வரலாறு உள்ளது. இது 2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர் நாம் குறுகிய கால கடன் அடிப்படையில் வணிக ரீதியாக கடனை பெற்றோம். வருடம் தோறும் இரண்டு பில்லியன் டொலர்களை கடனாக பெற்றோம்.
கடனை பெற்ற எமக்கு கடனை திரும்ப செலுத்துவதற்காக பணத்தை சம்பாதிக்க உரிய வேலைத்திட்டங்கள் இருக்கவில்லை எனவும் கலாநிதி நாலக கொடஹேவா கூறியுள்ளார்.
புத்தாண்டு ராசிபலன்.., நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனத்திற்கு எப்படி இருக்கும்? News Lankasri
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
Red Card வாங்கி பிக்பாஸில் இருந்து வெளியேறிய கம்ருதீன், பார்வதி வாங்கிய சம்பளம்... யார் அதிகம் பாருங்க Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam