ரணிலின் பரிந்துரையை எதிர்பார்க்கும் ஜனாதிபதி
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள வேளையில் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்ற கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக் காலத்தை நீடிக்க நிதியமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரையை ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 ஆம் திககியுடன் பதவிகாலம் முடிவடைகிறது
நெருக்கடியை நிர்வகிப்பதற்கு கலாநிதி நந்தலால் வீரசிங்க கொண்டு வந்த கொள்கைகளுக்காக பொருளாதார வல்லுனர்களால் பாராட்டப்பட்டார், மேலும் அவரது பதவிக்காலம் ஜூன் 30 ஆம் திககியுடன் முடிவடைகிறது.
இந்தப் பதவியில் நீடிக்கத் தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார். தற்போது நாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துரையாடி வருகின்றனர்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேலும் 5.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இன்று அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.