தலதா மாளிகையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி (Photos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை மாளிகையின் தியவடன நிலமே திலங்க தேலபண்டார வரவேற்றுள்ளார்.
புத்தரின் புனித தந்தம் வைக்கப்பட்டுள்ள தலதா மாளிகையின் மேல் மாடியில் உள்ள குடிலுக்கு சென்று ஜனாதிபதி மலர்களை வைத்து வழிபாடுகளில் ஈடுபட்ட, பௌத்த பிக்குமாரிடம் ஆசி பெற்றுக்கொண்டார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் தலதா மாளிகையில் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று அங்குள்ள நினைவு பதிவு புத்தகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கண்டி மாநகர மேயர் உள்ளிட்டோரும் தலதா மாளிகைக்கு சென்றிருந்தனர்.
இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்க முதல் முறையாக தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
