சர்வக்கட்சி அரசாங்கம் பற்றி பேசுவது கேலிக்குரியதாக மாறியுள்ளது:சரத் பொன்சேகா
சர்வக்கட்சி அரசாங்கம் பற்றி தற்போது பேசுவது கேலிக்குரியதாக மாறியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சர்க்கட்சி அரசாங்கம் பற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கதைத்த போது, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19வது திருத்தச் சட்டம் போன்ற திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பலமிக்க பிரதமர் ஒருவரை நியமித்து சிறந்த வழியில் நாட்டை கொண்டு செல்வார் என நினைத்தேன்.
எனினும் அப்படியான ஒன்றை தற்போது காணமுடியவில்லை. இதனால், இந்த சூழ்நிலையில் தேர்தலை நடத்த முடியாது என்பதால், புதிய சக்தியை கட்டியெழுப்பி, அதற்கு அரசியலமைப்புக்குள் அதிகாரத்தை பெற்றுக்கொடுத்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
அதேவேளை சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.