சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையை பகிரங்கப்படுத்திய ஜனாதிபதி
எதிர்வரும் டிசம்பர் மாதம் அளவில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
எகிப்து மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்ததாகவும் இதன்போதே அவர் இவ்வாறு உறுதியளித்ததாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தகவல்
நாடாளுமன்றத்தில் இன்று(10.11.2022) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிடும் போது குறுக்கீட்டு கேள்வியை எழுப்பிய, எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியயெல்ல, எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கை குறித்த தகவல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, ஏனைய கடன் வழங்குனர்களின் இணக்கப்பாடு எட்டப்படும் வரை இந்த விடயத்தை வெளிப்படுத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன், இணங்கப்பட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஏனைய கடன் வழங்குனர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
ஜனாதிபதியின் உறுதிப்பாடு
இதில் இணக்கப்பாடு காணப்பட்டதுடன் அதனை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவதாக ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாடுகளின் படி மறைமுக வரிகளை விதிப்பதன் மூலம் பாரத்தை சுமத்துவதா, நேரடி வரிகளை விதிப்பதா, அல்லது அரச செலவீனங்களை குறைப்பதா, என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடன் மறுசீரமைப்புக்கு கடன்வழங்குநர்களில் ஏதாவது ஒரு தரப்பு இணக்கம் வெளியிடாவிட்டால் அது குறித்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
கடன்களை இரத்துச் செய்வதா அல்லது கடன் செலுத்தும் தவணைகளை நீடிப்பதா என்பது குறித்து கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டவேண்டியிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
