பாடசாலைகளில் கோவிட் கொத்தணிகள் உருவாகும் சாத்தியம்! டொக்டர் ஹேமந்த ஹேரத் மறுப்பு
பாடசாலைகளில் கோவிட் கொத்தணிகள் எதுவும் இதுவரையில் உருவாகவில்லை என சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பளார் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் நான்கு மில்லியன் பாடசாலை மாணவ,மாணவியரில் சுமார் 400 முதல் 500 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு சூழலிலிருந்தே அதிக எண்ணிக்கையிலானவர்கள் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை மாணவ, மாணவியருக்கு இடையில் கோவிட் தொற்று வேகமாக பரவவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் உரிய முறையில் பாடசாலைகளில் பின்பற்றப்பட்டால் கொத்தணிகள் உருவாகும் சாத்தியம் கிடையாது எனவும் டொக்டர் ஹேமந்த ஹேரத் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளில் கோவிட் சுகாதார வழிகாட்டல்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்படுவதில்லை என ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
