துறைமுக நகர சட்டமூலம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அல்ல - நீதியமைச்சர்
துறைமுக நகர விசேட பொருளாதார வலயம் புதிததாக ஏற்படுத்தப்பட்ட ஒன்றல்ல எனவும் உலகில் இப்படியான பொருளாதார வலயங்கள் அதிகளவில் இருப்பதாகவும் அமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் அறிக்கையை மேற்கோள்காட்டி இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அலி சப்றி, துறைமுக நகரம் போன்ற உலகில் 5 ஆயிரத்து 383 வலயங்கள் இருப்பதாகவும் அவைற்றில் சில வெற்றிகரமாக அமைந்ததாகவும் சில தோல்வியடைந்தன எனவும் கூறியுள்ளார்.
இலங்கை பிராந்திய பொருளாதார வல்லரசுகளான தென் கொரியா, இந்தியா, மலேசியா, துபாய் ஆகிய நாடுகளுடன் போட்டியிடுகிறது.
எதிர்க்கட்சிகள் பூச்சாண்டியை காட்டி அந்நாடுகளிடம் இருந்து சாதகங்களை பெற முயற்சிப்பதாகவும் நீதியமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
துறைமுக நகர சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வாசித்தனவா என கேள்வி எழுப்பியுள்ள நீதியமைச்சர், சரியாக வாசித்து அறிந்திருந்தால், எதிர்க்கட்சியினர் பல வாதங்களை முன்வைத்திருக்க மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சில விடயங்களுடன் ஒப்பிடும் போது அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த ஷரத்தும் மீறப்படாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சட்டம் பற்றிய சிறிய புரிதலேனும் இருந்தால், துறைமுக நகர சட்டமூலம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறாது எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த பேரழிவு தரும் இரத்தக்களரி முடிந்ததும்.,புடினுடன் 2 மணிநேரம் பேசிய ட்ரம்ப்: வெளியிட்ட பதிவு News Lankasri
