தனியாக இருந்த பெண்ணின் வீட்டில் நுழைந்த பொலிஸார்: எழுந்துள்ள குற்றச்சாட்டு(Video)
தனியாக இருந்த 3 பிள்ளைகளின் தாயின் வீட்டிற்குள் சென்று ஏறாவூர் பொலிஸார் சோதனையிட்ட காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சோதனைக்காக நேற்று (23.11.2023) இரவு 10 மணியளவில் சென்ற, ஏறாவூர் பொலிஸார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
ஒரு பெண்ணை விசாரணை செய்வதாக இருந்தால் கட்டாயமாக பெண் பொலிஸார்களை அழைத்துச் செல்ல வேண்டியது கடமையும், சட்டமும் ஆகும்.
எனினும் இரவு வேலைகளில் ஆண் பொலிஸார்கள் கணவர் வீட்டில் இல்லை என்று கூறியும் தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் பெண் பொலிஸாரை அழைத்து செல்லாமல் நடந்து கொண்ட விதம் மிகத் தவறானது என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் குறித்த பெண்ணின் வீட்டில் பொலிஸார் சென்று சேதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட விதத்தினை கீழுள்ள காணொளியில் காணலாம்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |