மூடப்பட்ட கோளரங்கம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கோளரங்கம் மீண்டும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அபிவிருத்தி மற்றும் புத்தாக்க பணிப்பாளர் கலாநிதி உத்பலா அலஹகோன் தெரிவித்துள்ளார்.
பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட நிலையிலேயே கோளரங்கம் இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் கீழுள்ள கோளரங்கத்தின் புரொஜெக்டர் (Projector) உபகரணங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோளரங்கம் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி முதல் நேற்று (12) வரை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
நடவடிக்கைகள் முன்னெடுப்பு
இந்த நிலையில் குறித்த புரொஜெக்டர்கள் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (13) முதல் கோள் மண்டலத்தின் காட்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் அவசியமான நடவடிக்கைகளை இலங்கை கோளரங்க ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாணயநிதியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்து
பாடசாலை மாணவர்களுக்கான காட்சிகள் செவ்வாய் முதல் வெள்ளி வரை முற்பகல் 10 தொடக்கம் பிற்பகல் 2 மணி வரையும் பொதுமக்களுக்கு சனிக்கிழமைகளில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் காட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கான முன்பதிவுக்கு 011 2586 499 என்ற இலக்கம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |