கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் பலி!
முல்லைத்தீவு – நீராவிப்பிட்டி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ம் திகதி நீராவிப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற குடும்பத்தகராறு கத்திக்குத்தில் முடிந்துள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கான முகமட் றஜாஜ் (வயது-39) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று (19) உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
