சமையல் எரிவாயு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்த நபர் (Photos)
சமையல் எரிவாயு கொள்கலன்களை வீட்டில் சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த ஒருவர் ஹட்டன் கினிகத்தேன பிதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தனது வீட்டில் வைத்திருந்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு நிரப்பட்ட 230 கொள்கலன்களையும் மூன்று வெற்று கொள்கலன்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
52 வயதான இந்த சந்தேக நபர் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் குறித்து கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் இந்த நபர் எரிவாயு கொள்கலன்களை மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
