விதியை மீறி வந்த பேருந்து சாரதியை திணறவிட்ட நபர்! (Video)
வீதி விதி முறைகளை மீறி தவறான பாதை வழியில் வந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்றை இடை மறித்து இளைஞர் ஒருவர் முன் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஸ்யால சந்தியில் நடந்த குறித்த சம்பவம் அந்த பாதையில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் முன்பக்க கமராவில் பதிவாகியுள்ளது.
காணொளி காட்சிகளின்படி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறி சாலையின் தவறான பக்கத்தில் பயணித்த பேருந்தை நகர்த்த மறுப்பதும், அதற்கு வழிவிட மறுப்பதும் பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் தயங்காமல் பேருந்தின் முன் நின்று, பேருந்தை பின்னோக்கிச் செல்ல வைத்ததுடன், சரியான பாதையில் பயணிப்பதற்கும் காரணமாக இருந்துள்ளார்.
எவ்வாறாயினும், பேருந்து ஓட்டுநர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை திட்டியதை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
