இன்றுடன் நிறைவடையும் பாரிஸ் ஒலிம்பிக்போட்டி
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கோலாகலமாக தொடங்கி 15 நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் இன்றுடன் (11) நிறைவடைகிறது.
இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதன் தொடக்க விழா அணிவகுப்பு அங்குள்ள சென் நதியில் அரங்கேறியதுடன், படகுகள் மூலம் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் அணி வகுத்தனர்.
வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு
இந்நிலையில், இறுதி நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, கரப்பந்தாட்டம், மல்யுத்தம் உட்பட 9 விளையாட்டுகளில் 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.
போட்டிகள் முடிவடைந்ததும் நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
நிறைவு விழாவையொட்டி வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
முடிவில் அடுத்த (2028) ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) நகர மேயரிடம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கொடி இறக்கப்பட்டு ஒப்படைக்கப்படும்.
இதன்போது அமெரிக்க நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அமெரிக்க நாட்டு குழுவினர் இசை நிகழ்ச்சியும் சில நிமிடங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |