மகிந்தவின் உரைக்கு கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடி நிலை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5 வது ஆண்டு விழாவில் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆற்றப் போகும் உரையின் பிரதியை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் கடும் தேவை அந்த கட்சியை சேர்ந்த சிலருக்கு இருந்துள்ளதாக தெரியவருகிறது.
உரையின் பிரதியை முன் கூட்டியே கேட்கும் எவருக்கும் வழங்கக் கூடாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தடைவிதித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், பிரதமரின் உரையை முன் கூட்டியே அறிய முயற்சித்தவர்கள் தமது முயற்சியை கைவிட்டுள்ளனர்.
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5வது ஆண்டு விழாவில் பிரதமர் ஆற்ற வேண்டிய உரையை அந்த கட்சியினர் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளனர்.
எனினும் தயார்ப்படுத்தப்பட்டடிருந்த உரையை பிரதமர் விரும்பவில்லை என கூறியுள்ளார். குறித்த தரப்பினர் அந்த உரையிலும் மாற்றங்களை செய்ய முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளதாக பேசப்படுகிறது.
இறுதியில் பிரதமர் தான் தயாரித்த உரையை சிறிய மாற்றங்களுடன் விழாவில் ஆற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam