நீதித்துறையில் முக்கிய நியமனங்கள் – ஜனாதிபதியின் பரிந்துரை
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு நீதிபதிகளை நியமிப்பதற்கான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பரிந்துரை, அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான பரிந்துரையே அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அநுரவின் பரிந்துரை
இதேவேளை, நீதிச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, மூன்று நீதிச்சேவை அதிகாரிகளை மேல்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, பெருமாள் சிவகுமார், ஆனந்தி கனகரத்னம் மற்றும் ஞானேச லலித் கன்னங்கர ஆகியோர் நாளை (23) மேல்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.
வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவுகள்! அர்ச்சுனா எம்பி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்
YOU MAY LIKE THIS