குழந்தைகளுடன் நெடுஞ்சாலையில் செல்கிறீர்களா..! பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என்றாலும், உரிய வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் சில பயணிகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரதி மா அதிபர் W.P.J. சேனாதீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறு குழந்தைகள் மற்றும் 4 அடி 6 அங்குலத்திற்கும் குறைவான உயரம் கொண்ட பயணிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசனப்பட்டி அணிதல்
மேலும், வைத்திய காரணங்களுக்காக ஆசனப்பட்டி அணிய வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ள பயணிகளுக்கும் இந்த விதியிலிருந்து விலக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலைகளை பொலிஸ் அதிகாரிகள் கருத்தில் கொண்டு, உரிய விலக்குகளை வழங்குவார்கள் எனவும் சேனாதீர தெரிவித்துள்ளார்.
எனினும், ஆசனப்பட்டி அணிய முடியாத குழந்தைகள் மற்றும் மருத்துவ காரணங்களால் ஆசனப்பட்டி அணிய முடியாத பயணிகளை, குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, பாதுகாப்பான முறையில் வாகனத்தில் அழைத்துச் செல்வதை சாரதிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
YOU MAY LIKE THIS..