யாழில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதான இளைஞர்கள்: மற்றுமொருவர் பிணையில் விடுதலை
திருட்டுச் சம்பவம் தொடர்பில் அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு கைதி உயிரிழந்த நிலையில், இந்த வழக்கு இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரே இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு, வட்டுக்கோட்டைப் பொலிசாரிடமிருந்து மாற்றப்பட வேண்டும் என்று சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட பலரும் முன்னிலையாகியிருந்தனர்.
இதேவேளை, குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளானமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
