நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – எதிர்க்கட்சி
நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். கோவிட - 19 சடலங்களை அடக்கம் செய்வது குறித்து பிரதமரின் கருத்துக்கு ஆளும் தரப்பினர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலைமையை கொண்டே நாடு அடைந்துள்ள அராஜக நிலையை அறிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பிரதமர் நாடாளுமன்றில் மக்களுக்கு வாக்குறுதி வழங்குகின்றார். அமைச்சர் ஒருவர் மறுபக்கம் அவ்வாறு பிரதமர் கூறவில்லை என குறிப்பிடுகின்றார்.
பிரதமர் நல்லடக்கம் செய்ய முடியும் என்கிறார், அமைசசர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே அவ்வாறு செய்ய நிபுணர் குழுவின் அனுமதி தேவை என்கிறார்.
பிரதமர் இழிவுபடுத்தப்படுகின்றார். அரசாங்கத்திற்குள் பல்வேறு சிக்கல்கள்.
முன்னதாக ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளதாக கூறப்பட்டது தற்பொழுது பிரதமரும் தோல்வியடைந்துள்ளார்” என ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
