நாட்டு மக்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து:விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் இது வரையான காலப்பகுதிக்குள் 60 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இதேவேளை கடந்த வாரத்தில் மாத்திரம் 1152 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை 59,317 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு குறித்த காலப்பகுதியில் 19, 912 டெங்கு நோயாளர்களே பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அபாய வலயங்கள்

இந்த வருடம் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போது நிலவும் டெங்கு பரவலைக் கருத்திற்கொண்டு 36 பிரிவுகளை அபாய வலயங்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam