மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் - பேராசிரியர் மலிக் பீரிஸ்
கோவிட் நோய் எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசியை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அதன் பிரதிபலன்களை உடனடியாக பெற முடியாது எனவும் இதனால் தற்காலிக தீர்மான வைரஸ் பரவலை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும் எனவும் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்காக குறிப்பிட்ட காலத்திற்கு நாட்டை முடக்குவதை தவிர மாற்று வழியில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் விசேட மருத்துவ நிபுணர் கமனி மெண்டிஸூடன் இணைந்து இலங்கையில் கோவிட் 19 தொற்று நோய் நிலைமையை கட்டுப்படுவதற்காக அறிவியல் ரீதியான உருவாக்கப்பட்டுள்ள வழிமுறைகள் அடங்கிய பிரசுரம் மூலம் மலிக் பீரிஸ் இதனை வலியுறுத்தியுள்ளார்.
தற்போது அதிகரித்து வரும் மரண வீதங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்து மேலும் அதிகரிக்காலம். இந்த நிலைமை மாற சில மாதங்கள் செல்லக் கூடும்.
நாட்டிற்குள் ஆபத்துடன் கூடிய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு தடுப்பூசியை வழங்கி முடிக்க குறைந்தது 6 மாத காலம் செல்லலாம் என்பதே இதற்கு காரணம்.
நாடு முழுவதும் அனைத்து பிரதேசங்களிலும் வைரஸ் பரவியுள்ளதால், சிறிய சிறிய பிரதேசங்களை முடக்குவதன் மூலமே மாகாணங்களுக்கு இடையில் பயண கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமோ வைரஸ் பரவலை குறைக்க முடியாது.
மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசங்களில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசங்களை அணிவது என்பன கூட தீர்வாக கருத முடியாது. இந்த நிலைமையில் 14 நாட்களாவது நாட்டை முடக்க வேண்டியது கட்டாயம் எனவும் மலிக் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.