உலகளாவிய ரீதியில் 50 லட்சத்தை கடந்த கோவிட் மரணங்கள்
உலகம் முழுவதும் கோவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணங்களில் 25 லட்சம் மரணங்கள் பதிவாக ஒரு வருடத்திற்கும் மேல் சென்றுள்ளதுடன் ஏனைய 25 லட்சம் மரணங்கள் கடந்த 8 மாதங்களுக்குள் பதிவாகியுள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் பதிவான மரணங்களில் அதிகளவான மரணங்கள் அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், மெக்சிகோ மற்றும் இந்தியாவில் பதிவாகியுள்ளன.
கடந்த வாரம் உலகம் முழுவதும் தினமும் 8 ஆயிரம் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனடிப்படையில் ஒரு நிமிடத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் மரணங்கள் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் வேகப்படுத்தப்பட்டமையால் கடந்த சில வாரங்களாக உலகில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.