ஊடகங்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும் வடக்கின் செயற்பாடுகள்!
தமது செயற்பாடுகளை ஊடகங்கள் உட்பட பல தரப்புக்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் (Nagalingam Vedanayagam) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
"இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியால் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்குப் பல்வேறு வகையிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிகளவான நிதியும் வடக்கு மாகாண சபைக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி தனது உரையில், வடக்கு அதிகாரிகள் கோரிய நிதியையே வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்யவேண்டும்.
மேலதிக நிதி
எவ்வளவு விரைவாக அந்த நிதியை செலவு செய்து முடித்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும். இது எமக்கு சவாலானதுதான்.
நாம் நிதியைத் திருப்பி அனுப்பாமலே நிதியை திருப்பி அனுப்பியதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், பெருமளவு நிதி எமக்கு கிடைக்கப்பெறும் நிலையில் அதை உரிய முறையில் செலவு செய்யவேண்டும்.
எமது செயற்பாடுகளை ஊடகங்கள் உட்பட பல தரப்புக்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: போனை தர்றேன் தர்றேன் என கதறிய அறிவுக்கரசி.... மாஸ் காட்டிய பெண்களுக்கு இப்படியொரு ஏமாற்றமா? Manithan

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
