பெண்கள் தலைமையில் பரபரப்பை ஏற்படுத்தும் கொள்ளை கும்பல்
கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவங்கள் பெண்கள் தலைமையில் செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் இருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறும் பெண்கள் சூட்சுமான முறையில் உடமைகளை திருடுவதாக பேருந்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கையடக்க தொலைபேசிகள்
கடந்த 49 நாட்களில் கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டதாக நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கண்டி பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதுபோன்று முறைப்பாடு செய்யப்படாத பல திருட்டு சம்பவங்கள் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருட்டு சம்பவம்
கண்டி நகரத்திலிருந்து புறநகர் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு பயணிக்கும் பேருந்துகளில் இந்த சம்பவங்கள் பெரும்பாலும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திருட்டு சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
You May Like This..
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri