அடுத்த இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கவை - பொது மக்களுக்கு எச்சரிக்கை
நாடு திறக்கப்பட்டதற்கு பின்னரான இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அடுத்த இரண்டு வாரங்களின் பின்னர் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
மக்களின் இரண்டு வார செயற்பாடுகளின் பின்னரே மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் முடிவுக்கு வர முடியும் என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய நிலையில் கொவிட் தொற்று அதிகரித்தால் அது கட்டுப்படுத்த முடியாத நிலைமை வரை செல்லும் என என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நேற்று வரையிலும் மக்கள் கொவிட் தொற்றினை முழுமையாக மறந்து செயற்படுவதாக தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri