கொலை செய்யப்பட்ட இலங்கையருக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கை
எதிர்வரும் 10 ஆம் திகதி பாகிஸ்தானில் விசேட கண்டன தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - சியால்கொட் நகரில் பிரியந்த குமார என்ற இலங்கையர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், நினைவுகூரும் வகையிலும் இந்த கண்டன தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பிரியந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் கனேமுல்ல - பொல்ஹேன பொது மயானத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 8 பேர் இன்று கைது செய்யப்பட்டதாக செய்திகளின் வெளியாகின.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் 140க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 34 பேர் பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிரியந்த குமாரவின் படுகொலை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அஸ்கிரிய பீடாதிபதி வணக்கத்துக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கடிதம் ஒன்றை அனுப்பி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எடுத்த நடவடிக்கைக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.



