தேசிய சபை என்பது அரசியல் தந்திரம்:டலஸ் அழகப்பெரும
தேசிய சபை என்பது அரசியல் மூலோபயம் அல்ல எனவும் அது அரசியல் தந்திர வழிமுறை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தேசிய சபை என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாதது
நாடாளுமன்றத்தில் இன்று தேசிய சபை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொள்கை வகுப்பாளர்களாக பார்க்கும் போது தேசிய அரசாங்கம் என்பது புதிய எண்ணக்கருவல்ல. தேசிய சபை சம்பந்தமாக அரசியலமைப்புச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன் தேசிய சபைக்கு எவ்வித நிறைவேற்று அதிகாரங்களும் கிடையாது. அது வெறும் அரசியல் சிற்பம் மாத்திரமே. நாங்கள் அணி என்ற வகையில் இந்த எண்ணக்கருவை நிராகரிக்கின்றோம்.
12 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு உண்ண உணவில்லை
12 லட்சம் பாடசாலை பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவை உண்ண முடியவில்லை. தேசிய சபை என்பது பட்டினியில் இருக்கும் இந்த பிள்ளைகளுக்கு தேவலோக கதைகளை கூறுவது போன்ற விடயம் எனவும் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 49 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
