பிறந்து ஏழு நாட்களேயான கைக்குழந்தையை விற்ற இளம் தாய்
பிறந்து ஏழு நாட்களேயான கைக்குழந்தையை 50,000 ரூபாவுக்கு விற்ற இளம் தாயொருவர் நேற்று (26.09.2022) மாலை அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு உதவியதாக கூறப்படும் அரச வைத்தியசாலை தாதி ஒருவரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குழந்தையை விற்பனை செய்த 21 வயது பெண்
மல்வத்து ஓயா ஆற்றங்கரையில் உள்ள குடிசை ஒன்றில் வசித்து வந்த கெப்பிட்டிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே குழந்தையை விற்பனை செய்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக, தமது பெண் குழந்தையை வாஹல்கட பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு அவர் விற்பனை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இன்னும் சிலரும் கைது
அத்துடன் தமக்கு ஏற்கனவே ஒன்றரை வயது மகனும் இருப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
