நள்ளிரவில் வெனிசுலா ஜனாதிபதி சிக்குவதற்கு காரணமான கைத்தொலைபேசி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுதியாக வெனிசுலா ஜனாதிபதிக்கு தொலைப்பேசி அழைப்பெடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“வெனிசுலாவின் பாதுகாப்புதுறைகளும் ஒழுங்காக கட்டமைக்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பிருந்தே வெனிசுலா ஜனாதிபதியின் நடவடிக்கைகள் குறித்து முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
வெனிசுலாவினுடைய வாழ்க்கையே எண்ணெய் வளத்தில் தான் உள்ளது, தற்போது அமெரிக்கா அதனை கையகப்படுத்தியுள்ள நிலையில், அந்த 3 கோடி மக்களின் நிலை என்ன என்ற கேள்வியெழும்பியுள்ளது.
அதுமட்டுமன்றி வெனிசுலா ஜனாதிபதி அடிக்கடி தன்னுடைய இடத்தை மாற்றியமைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
இந்தநிலையில் ட்ரம்ப் அவருக்கு தொலைப்பேசி அழைப்பினை ஏற்படுத்தியுதுடன் அது தொடர்பில் எந்த தகவலையும் வெளியிடவில்லை” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..