கோட்டாபய அரசால் பதவி நீக்கப்பட்ட மிக நேர்மையான முக்கியஸ்தர்! - பேராசிரியர் கீதபொன்கலன்
மத்திய வங்கியின் ஆளுநர் நியமனமும், மஹிந்த சமரசிங்கவின் நியமனமும் வேறாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று என அமெரிக்க முன்னணி பல்கலைக்கழகத்தில்(Salisbury University) அரசியல்துறை விரிவுரையாளராக இருக்கும் கீதபொன்கலன்(S.i. Keethaponcalan) தெரிவித்துள்ளார்.
எமது செய்திச் சேவையின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் கொழும்பு பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றிய போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் லக்ஸ்மன் கொழும்பு பல்கலைக்கழத்தில் உயர் பதவியில் இருந்தார். எனவே அவரை எனக்கு தனிப்பட்ட ரீதியில் நன்கு தெரியும்.
அவர் ஒரு கொள்கை ரீதியிலான ஒரு நபர் என்று சொல்லலாம். தனது கொள்கைகளில் நிலையாக இருந்த ஒருவரே பேராசிரியர் லக்ஸ்மன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் லக்ஸ்மன் அவர்கள் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தபோது அரசாங்கம் தனக்கு ஏற்றது போல மத்திய வங்கியை பயன்படுத்திக் கொள்வதில் சிக்கல்கள் இருந்திருக்கலாம்.
அதன் காரணமாக தங்களது தேவைகளுக்கு ஏற்ப, அரசியல் ரீதியாக செயற்படக்கூடிய ஒருவர் ராஜபக்ச அரசிற்கு தேவைப்பட்டது. அதற்கு கப்ரால் ஒரு சிறந்த நபர் என்று கூறலாம். ஏனெனில் அவர் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பாரிய எச்சரிக்கை - இந்தியா உருவாக்கும் அதிநவீன Pinaka-IV ரொக்கெட் அமைப்பு News Lankasri
