சம்பளத்தில் அரைவாசி கோவிட் நிதியத்திற்கு! அமைச்சரின் நெகிழ்ச்சி செயல்
தனது இந்த மாத சம்பளத்தின் அரைவாசியை கோவிட் நிதியத்திற்காக வழங்குவதாக அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த பணத் தொகையை கோவிட் நிவாரண நிதியத்திற்கு இன்று அல்லது நாளை வைப்புச் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
தனக்கென வீடோ, காணி பூமியோ அல்லது வேறும் சொத்துக்களோ இல்லாத நிலையிலும், கோவிட் பெருந்தொற்று காரணமாக அரசாங்கம் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகளை கருத்திற் கொண்டு தாம் இவ்வாறு சம்பளத்தின் ஒரு பகுதியை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு பாரிய நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வரும் நிலையில் சம்பளம் கோரி போராட்டம் நடத்தும் தரப்பினருக்கு ஓர் செய்தியை இதன் மூலம் சொல்ல விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பெருந்தொற்று நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதனால் அனைவரும் இணைந்து முடிந்தளவு உதவிகளை வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.
நாட்டை முடக்குமாறு கோரி வரும் நபர்கள் நாட்டிற்காக எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தாம் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் தான் பயன்படுத்திய வாகனத்தையும் அண்மையில் நோய் நிலைமையினால் விற்க நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் கட்சி பேதங்களை களைந்து உதவ வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.