எது சிறந்தது? கேள்வி எழுப்பும் அமைச்சர்
மக்களை வரிசைகளில் நிற்க வைப்பது மற்றும் பொருட்களின் விலைகளை ஓரளவுக்கு அதிகரித்தேனும் மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது, இந்த இரண்டில் எது சிறந்தது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abeygunawardena) கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகங்களிடம் நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களை வரிசையில் நிற்க வைப்பதா, அல்லது பொருட்களை இறக்குமதி செய்து, சாதாரண விலை அல்லது மக்களுக்கு சமாளிக்க முடிந்த விலையில் அதாவது சற்று விலையை அதிகரித்து வழங்குவதா?. இதில் எது சிறந்தது.
மக்கள் வரிசையில் நின்றால் என்ன நடக்கும். மக்கள் வரிசையில் நிற்பதை காண எதிர்க்கட்சியினருக்கு அளவு கடந்த ஆசை.
அப்போது அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அரசாங்கத்தை நன்றாக விமர்சிக்க முடியும் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 15 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam