இராணுவத்தளபதிக்கு வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண
இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கோவிட் வைரஸ் பற்றி எதுவும் தெரியாது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்புக்குழுவின் பிரதானியாக இராணுவத் தளபதி செயற்பட்ட போதிலும் அவருக்கு வைரஸ் பற்றி எவ்வித புரிதலும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் தடுப்பூசிகளின் மூலம் ஒரு வருடம் மட்டுமே பாதுகாப்பு கிடைக்கும்.
ஓராண்டின் பின்னர் இந்த தடுப்பூசி மருந்தளவு ஒன்றை மீளவும் வழங்க நேரிடும் என அவர் சுட்டிக்கட்டியுள்ளார்.
இலங்கை போன்ற நாடு ஒன்றில் ஆண்டு தோறும் தடுப்பூசி மருந்தளவுகளை மக்களுக்கு வழங்க முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 80 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதாலேயே வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த முடியும்.
வைரஸை அழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது. வைரஸ் தொடர்பில் பேராசிரியரான தம்மிடம் அரசாங்கம் கோவிட் தொடர்பில் எவ்வித ஆலோசனைகளையும் இதுவரையில் பெற்றுக்கொண்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே மட்டும் ஒரேயொரு தடவை தம்முடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri