மக்களே அவதானம்: வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை(Red alert) விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
அத்துடன், கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலையின் உயரம் 2.5 – 3.5 மீற்றர் வரை எழ கூடும் என எதிர்பாக்கப்படுகின்றது.

இந்த நிலையில், மறு அறிவித்தல் வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கற்பிட்டி, கொழும்பு, காலி தொடக்கம் மாத்தறை வரையிலான பகுதிகளில் கடல் அலை கரையை வந்தடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.
றீமால் (Remal) சூறாவளியின் தாக்கம் நாளை(30) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக, எதிர்வரும் 2 அல்லது 3 தினங்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை நிலவும் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, மழையுடனான வானிலைக் காரணமாக 10,483 குடும்பங்களைச் சேர்ந்த 39,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கைத் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam