ரஷ்யாவிற்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த 3 பேர் கைது
ரஷ்யாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாவிற்கு மேல் மக்களிடம் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 140 பேரிடம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொரட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் தகவல்
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாரதி பயிற்சி நிலையமொன்றை நடத்திச் செல்பவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த சாரதி பயிற்சி நிலையத்தை பரிசோதனைக்கு உட்படுத்திய போது 39 கடவுச்சீட்டுக்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்கள் பொதுமக்களிடம் 6 முதல் 14 இலட்சம் ரூபா வரையில் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கட்டுபெத்த மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
