ஜனாதிபதியுடான சந்திப்பு நிறைவடைந்தது - மிக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது
முன்னாள் அமைச்சர்களுடன் ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி நாளை மாலை புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்லும் நோக்கில் அமைச்சு பொறுப்புகளை ஏற்காதிருப்பதற்கு முன்னாள் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், புதிய அமைச்சரவையில் ராஜபக்சர்கள் எவரும் அமைச்சு பொறுப்புகளை ஏற்காதிருப்பதற்கு தீர்மானம் எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
