இலங்கையின் முக்கிய பிரச்சினைக்கு சீனா வழங்கியுள்ள தீர்வு!
சீனாவின் கப்பல் ஒன்று இன்று(07.12.2022) நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கையில் நிலவும் பல நெருக்கடிகளுக்கு சீன அரசாங்கம் பல வழிகளில் உதவிகளை செய்துவருகின்றது.
அந்தவகையில் இலங்கை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக சின அரசாங்கம் வழங்கியுள்ளது.
5 பில்லியன் ரூபாய் பெறுமதியான
நன்கொடை இந்த மருந்து பொருட்கள் 2 பில்லியன் ரூபாய் பெறுமதியானவை என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 24 கொள்கலன்களில் 255 மெட்ரிக் தொன் எடையுடைய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகளை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri