ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மநபர்கள்
நெதர்தலாந்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த வயதான தம்பதியிடம் மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தம்பதியிடமிருந்து 500 டொலர், 500 யூரோ மற்றும் 30,000 இலங்கை ரூபாய் திருடிய குற்றச்சாட்டில் பொலன்னறுவை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுராதபுரம் மற்றும் திருகோணமலைக்கு சுற்றுலா சென்றுவிட்டு 18 நெதர்லாந்து நாட்டவர்கள் பொலநறுவையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.
பொலிஸாரிடம் முறைப்பாடு
ஹோட்டலில் தங்கியிருந்த 75 முதல் 85 வயதுக்குட்பட்ட வெளிநாட்டு தம்பதியினர், நேற்று முன்தினம் காலை தங்கள் சுற்றுலா வழிகாட்டிக்கு பணம் செலுத்துவதற்காக தங்கள் கைப்பைகளைத் திறந்த போது, 500 டொலர், 500 யூரோ மற்றும் 30,000 இலங்கை ரூபாய் காணாமல் போனதாக கண்டுபிடித்ததாக பொலன்னறுவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தங்கள் கைப்பைகளில் இருந்த டொலர்கள் மற்றும் யூரோக்கள் உள்ளிட்ட பணம் காணாமல் போனது தொடர்பாக தங்களுடன் வந்தவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு தம்பதி
அதற்கமைய சக வெளிநாட்டவர்களுடன் மேற்கொண்ட விசாரணையின் போது பணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலன்னறுவை மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க மற்றும் பொலநறுவை பொலிஸ் கண்காணிப்பாளர் பிரகதி அபேசிங்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.
திருட்டு குறித்து முறைப்பாடு செய்தி வெளிநாட்டு தம்பதி முறைப்பாட்டின் நகலுடன் பொலன்னறுவை விட்டு வெளியேறியதாக விசாரணையை நடத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குணசேகரன் நெற்றியில் அதிரடியாக துப்பாக்கி வைத்த போலீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan