பாடசாலை வளாகத்திற்குள் ஆசிரியர் ஒருவரின் மோசமான செயல்
பாடசாலை ஒன்றின் ஆசிரியர் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் ஐஸ் போதைப்பொருள் பொதியிடல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை ஆசிரியருடன் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செவனகல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பு ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக செவனகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர், தனமல்வில ஊவா குடாஓயா பிரதேசத்தை சேர்ந்த நபர் எனவும் அவருக்கு சுமார் 60 வயது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்களுக்கு இந்த போதை பொருள் விற்பனை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam